logo

பூமியில் ஜீவராசிகள் தோன்றியது எப்படி?

 | 
bhomii

சூரியனின் ஒளிக்கதிர்கள் நாம் ஏற்கனவே படித்தோம்...  மூலசக்தியாகிய ஓம் என்கிற மூல அணுவின் மூலம் தோன்றிய எழுவகை சக்திகள் 
(1) ஆகாயம் 
(2)பேரண்டம் 
(3) உருமி இடிவாயு 
(4)அக்னி மின்னல் 
(5) பூமிகள் 
(6)சூரியன்கள் 
(7) அகண்ட மேகம் என்பது......

மேற்கண்ட ஏழுசக்திகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னுடைய ஆகர்ஷன சக்தியால் பூமியில் செயல்படுகின்றன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்தும் தன்னைத்தானே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு ஒரு கோளமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இந்த பஞ்ச பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பதுவே பூமிக் கோள். அதனை இயக்குவது சூரியன். எப்படி என்பதை ஆய்வோம்?

பூமிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் மட்டும் ஒளி பரப்பவில்லை என்றால் எந்த உயிரும் பிழைக்காது அழிந்துவிடும் என்பது யாவரும் அறிவர். பிறகு எப்படி ஜீவராசிகள் தோன்றுகிறது? என்ற கேள்வி எழுவது இயல்பு? பூமியானது பஞ்சபூதங்களை ஒன்றோடு ஒன்று கூட்டு கலவையே ஜடப்பொருளாக உலகத்தில் தோன்றுகின்றன. எப்படித் தோன்றுகிறது? என்று ஆய்வு செய்கின்றபோது பஞ்சபூதம் ஐந்தும் அணுக்களின் கூட்டமைப்பே. பூமிக்கோள் சுத்துகின்ற போது அதனுடைய ஆகர்ஷண சக்தியால் ஒன்றை ஒன்று ஈர்த்து போல பஞ்சபூதத்தில் உள்ள ஒவ்வொரு பூதத்திலுள்ள அணுக்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து பஞ்சபூத கூட்டுக் கலவையாக ஜீவராசிகளை உருவாக்குகின்றன. அதனாலேதான் பூண்டு முதல் அனைத்து ஜீவராசிகள் இடத்திலும் ஐந்து பூதத் தத்துவங்கள் அடங்கியிக்கின்றன.

ஜடப்பொருளான பஞ்சபூதமான பூமியில் ஜீவராசிகள் தோன்றுவதற்கு முதல் காரணமாக இருப்பது சூரியன். சூரியனின் ஒளிக் கதிர்கள் பூமியில் பட்டவுடன் அதற்கேற்ற அணுக்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. அதுவும் கூட்டம் கூட்டமாக முளைக்க ஆரம்பிக்கும். இதை காகபுசுண்டர் கீழ்வரும் பாடலில் தெளிவாகக் கூறுகிறார்.

"காணிந்தச் சூரியனார் மடிந்த போது
கங்குலது வந்துவிடும் மறைவார் சீவர்
பூணிந்தச் சூரியனார் வருவார் வந்தால்
பூமிதனிற் புற்றீசல் வந்தாப் போலத்
தோணிந்த சீவர்களும் புற்பூண்டோடு
தோன்றிடுவர் மண்ணிலிருந் தேறுவாரே"
          -காகபுசுண்டர் பெருநூல் 1000

மேற்கண்ட பாடல் விளக்கமானது சூரியன் தோன்றவில்லை என்றால் எல்லா ஜீவன்களும் மறையும் என்றும் சூரியன் தோன்றினால்தான் புற்றீசல் போல் எல்லாம் தோன்றும் என்றும் கூறியுள்ளார்.

Around The Web

Latest News

You May Like

Featured