October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

பரதநாட்டியத்தில் உலக சாதனை முயற்சி, 1330 திருக்குறளுக்கு 12 மணி நேரம் நாட்டியமாடும் நடனத் திருவிழா

பரதநாட்டியத்தில் உலக சாதனை முயற்சி, 1330 திருக்குறளுக்கு 12 மணி நேரம் நாட்டியமாடும் நடனத் திருவிழா மயிலாடுதுறையில் தொடங்கியது, மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த 50பரதக் கலைஞர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. 1330 திருக்குறளுக்கும் இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடினர்.

இசை கவிதை உரைநடை பாட்டு ஆகிய வடிவில் மீண்டும் மீண்டும் 1330 திருக்குறளுக்கும் சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற அதற்கு ஏற்ப முக பாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி வருகின்றனர்.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரதநாட்டிய மாணவ மாணவிகள் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க