முகப்புவிளையாட்டுகிரிக்கெட்T20 World Cup | அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா? இன்று வங்கதேசத்துடன் பலப்பரீட்சை | IND...

T20 World Cup | அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா? இன்று வங்கதேசத்துடன் பலப்பரீட்சை | IND vs BAN

20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ளுமா என்ற எதிர்ப்பு நிலவுகிறது. அட்டிலைட் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இரு அணிகளும் மூன்று போட்டிகளின் முடிவில் இரு வெற்றிகளுடன் தல 4 புள்ளிகளை பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாண்ட் அணியை வீழ்த்திய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் சறுக்கியது. எனவே இந்த போட்டியில் மீண்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று போட்டிகளிலும் ஒற்றை இலக்கில் வெளியேறிய கேஎல் ராகுல் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உட்பட அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருப்பதால் அவர் பொறுப்புடன் ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. லெக் ஸ்பின்னர்க்கு எதிரான வங்கதேச பேட்மேன்கள் என்பதால் சாகர் களம் இறங்க படுவாரா அல்லது தீபக் ஹூடா க்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என தெரியவில்லை.

தினேஷ் கார்த்திக் முழு உடல் தகுதி உடன் இருக்கிறாரா என்பதைப் பொறுத்தே களம் இறங்குவார் என தெரிகிறது. வங்கதேச கேப்டன் ஷிகிப் அல்ஹசன் சொன்னது போல வங்க தேசத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு தான் நெருக்கடி அதிகம், நெதர்லேண்ட் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வேக பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது பந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் மோதுகின்றன. உலக கோப்பையில் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!