October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

கோவில் நிலங்களை மீட்க தீவிரம் காட்டும் திமுக பஞ்சமி நிலங்களை மீட்காதது ஏன்?

கோவில் நிலங்களை மீட்க தீவிரம் காட்டும் திமுக பஞ்சமி நிலங்களை மீட்காதது ஏன் பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி வேலூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் டிஎம்.புரட்சிமணி ஆவேசம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசிக்கும் நீலப்புலிகள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் பொறியாளர் செந்தமிழன் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பட்டியல் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமைப்பு செய்துள்ளவர்கள் மீதும் இதுகுறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத வேலூர் மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மற்றும் பஞ்சமி நிலங்களை பட்டியல் சமூக மக்களிடமே மீட்டு தரக்கோரி மாவட்ட செயலாளர் பொறியாளர் செந்தமிழன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் டிஎம்.புரட்சிமணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கனக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க