முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது சட்டிக்குள் தலை மாட்டிக் கொண்டது மதிநுட்பத்துடன் செயல்பட்ட தீயணைப்பு துறையினர்

சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது சட்டிக்குள் தலை மாட்டிக் கொண்டது மதிநுட்பத்துடன் செயல்பட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை மணி நகரம் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது சட்டிக்குள் தலை மாட்டிக் கொண்டது மதிநுட்பத்துடன் செயல்பட்ட தீயணைப்பு துறையினர்.

மதுரை மணி நகரத்தை சேர்ந்த 2 வயது சிறுமி அஸ்வினி தன் இல்லத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சட்டிக்குள் தலை மாட்டிக் கொண்டது.

உடனடியாக அதிர்ந்ததுபோன பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் இருப்பினும் கூட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றவுடன் அங்கே இருந்த தீயணைப்புத் துறையினர் சிறிய கத்திரிக்கோலை கொண்டு குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சட்டியை வெட்டி பத்திரமாக மீட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் போராடி சட்டியை எடுத்ததால் குழந்தைக்கு எந்தவித உடல் நல குறைவும் ஏற்படவில்லை.

பெற்றோர்கள் மன மகிழ்ச்சியோடு தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.

அதே சமயம் வீட்டில் விளையாடும் குழந்தைகளை எச்சரிக்கையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் வைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!