வீட்டுக்கு வந்த ஷாருக்.. வாசலுக்கு வந்து வழியனுப்பிய நயன்.. வைரல் வீடியோ.!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிவருகிறது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகின.

தற்போது பதான் படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் நயன்தாராவின் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானை வழியனுப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் இருவரையும் கண்ட ரசிகர்கள் அபார்ட்மென்ட் வாசலில் குவிந்தனர்.

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?