முகப்புபொழுதுபோக்குசினிமா செய்திகள்இடுப்பு எலும்பு பகுதியில் மிகவும் வலி - ரசிகர்கள அதிர்ச்சி

இடுப்பு எலும்பு பகுதியில் மிகவும் வலி – ரசிகர்கள அதிர்ச்சி

நடிகை குஷ்பூ ( அக்டோபர் 5) இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்துல தற்போது வெளியீட்டு உள்ள புகைப்படம் ரசிகர்கள அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை குஷ்பூ.

இவர் நடிப்பையும் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார் மேலும் சின்னத்திரையில் சீரியல் நடித்து வருகிறார்.

இது மட்டும் இன்றி பாஜகவின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.

மேலும் படங்களையும் தயாரித்து வருகின்றார். நடிகை குஷ்பூ தயாரித்து சுந்தர் சி இயக்கிய காபி வித் காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகை குஷ்பூ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அதேபோல் இன்றும் (அக்டோபர் 5) டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தில் அவர் மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ஏறும் நிலையில் படுத்து உள்ளார். இந்த படம் தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த புகைப்படம் வெளியிட்டு அதில் குறிப்பிட்டுள்ளவை “தனக்கு முதுகு தண்டுவட பகுதிக்கு கீழ் இடுப்பு எலும்பு பகுதியில் மிகவும் வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 4) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தாம் 2 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும். எனவே இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்”.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!