முகப்புஇன்றைய செய்திகள்வானிலை11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை மற்றும் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை இடி மின்னல் கூடிய லேசான முதல் மிதமான மழையானது கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் உள்பட காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5, 6 மற்றும் 7 தேதிகளில் கனமழை ஆனது பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 8 தேதி லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

அடுத்த 48 மணி நேரத்தை பொருத்தவரை மேகம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறையும் அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக கனமழை இருப்பதால் பள்ளிகளுக்கும் விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பொதுமக்களும் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!