Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

மதுரையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதம் – பயணிகள் அவதி

மதுரையில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமானதால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் வசதிக்காக பகல் நேர சென்னை பயணத்திற்கு ஏதுவான ரயில் போக்குவரத்தில் வைகை எக்ஸ்பிரஸ்க்கு மிக முக்கிய பங்கு உண்டு. அது மட்டுமின்றி மதுரை ரயில் நிலையத்தில் வழியாக சற்று ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன.

மதுரையில் இருந்து காலை செல்லக்கூடிய வைகை விரைவு ரயில், இன்று காலை 7:10 மணிக்கு கிளம்ப வேண்டிய நிலையில் 7.15 வரை ரயில் பெட்டிகள் நடைமேடைக்கு வராமல் இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாயினர். மேலும் 7:20க்கு ரயில் பெட்டிகள் நடைமேடைக்கு கொண்டுவரப்பட்டு சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக 7:40க்கு ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில் தொழில்நுட்பம் காரணமாக ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க