முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல ராணிப்பேட்டை, சென்னை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஒரு நாள் விடுமுறை என்று சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உடைய மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!