முகப்புஇன்றைய செய்திகள்அரசியல்சொல்லுக்கும் செயலுக்கும் பாததூர வித்தியாசம் உள்ளது - மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

சொல்லுக்கும் செயலுக்கும் பாததூர வித்தியாசம் உள்ளது – மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

மதுரை ரயில்நிலையம் எதிரே உள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட்டில் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றும் தற்போது அர்ஜூனா விருதுக்கும் தேர்வாகியுள்ள மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவையும், டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கால் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த மதுரை மீனாட்சி கல்லூரியில் பயிலும் மாணவி வர்ஷினியையும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பேட்டி அளித்து பேசுகையில்,

அரசுப்பள்ளியில் படித்து மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளனர் இரண்டு வீராங்கனைகளான வர்சினியும், ஜெர்லின் அனிகாவும். இவர்களால் மதுரை பெருமை அடைந்துள்ளது.

மீனாட்சி கல்லூரியில் உள்ள விளையாட்டு வீராங்கனைகளுக்கு காலை உணவை இலவசமாக கொடுக்க உள்ளேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டங்கள் தொடர்ந்து வருகிறது.
விளையாட்டு வீரராங்களைகளுக்கு அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

130 கோடி மக்களும் தமிழ்மொழியை காக்க வேண்டும், அதற்கான கடமை உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆனால் மத்திய அரசின் கல்வித்துறை டெல்லி பல்கலையில் பயிலும் மாணவர்கள் இந்தியில் தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் இந்தி கட்டாயம் என்று அறிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயிலும் மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் இந்தி கட்டாயம் என்றால் மற்ற மாநில மாணவர்களின் தேர்வு நெருக்கடிக்கு உள்ளாகும்.

ஒருபக்கம் தமிழை போற்றுகிறோம், கொண்டாடுகிறோம் என சொல்லிவிட்டு மறுபக்கம் இந்தியை திணிப்பதை மையப்பொருளாக, பணியாக மத்திய அரசு செய்கிறது.

காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி இதைத்தான் காட்டுகிறது.

பாஜக தங்களது வாக்கு வங்கியை மேம்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு யுக்தியை கடைப்பிடித்து வருகின்றனர்.

தொன்மையான தமிழ் பண்பாட்டையும், மொழியையும் வைத்து இங்கு இடம் பிடிக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

சொல்லுக்கும் செயலுக்கும் பாததூர வித்தியாசம் உள்ளது.

8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் படி மத்திய அரசு தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தால் தமிழர்கள் கொண்டாடுவார்கள்.

மொழியை தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்தும் எளிய வழியை மிக அதிகமாகவே கையாளுகிறார்கள்.

திருக்குறளையும், புறநானுற்றையும் சொல்லும் வாய்ப்பந்தல் வேலை தான் இங்கு நடக்கிறது.

தமிழக,கேரள, தெலுங்கானா ஆளுநர்கள் பாஜகவின் பிரதிநிதிகளாகவே உள்ளனர்.

அரசியல் சாசன சட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர்களாக இல்லை.

ஆளுநர்களின் மாண்பை சிதைக்கும் இவர்களை போன்றவர்களை இதுவரை இந்தியா கண்டதில்லை.

ஆளுநர் போல பேசமால் பாஜக அரசியல் ஏஜன்ட்களாகவே ஆளுநர்கள் பேசுகிறார்கள்.

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என தமிழக ஆளுநர் கூறுவதை போல

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கு எல்லாம் கையெழுத்து போட நான் என்ன ரப்பர் ஸ்டம்பா என குடியரசுத்தலைவர் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா.

அதை பாஜக அரசு ஏற்றுக்கொள்ளுமா?

தாக்கல் செய்யட்டும். நீதிமன்றம் தானே தீர்ப்பு கொடுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கு 23ம் தேதி நடைபெற உள்ளது. மதுரை மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் நானும் வழக்கில் இணைந்துள்ளேன்.

தமிழ் பண்பாடு மரபுக்கு எதிராக மிகப்பெரிய சதி பிண்ணப்பட்டுள்ளது. அதன் விளைவு தான் இந்த வழக்கு.

ஜல்லிக்கட்டு சட்ட போராட்டத்தில் தமிழக அரசு வெற்றி பெறும்.

ஜல்லிக்கட்டை காப்பாற்ற ஒவ்வொரு தமிழனும் போராடுவான். முன்வருவான். ஜல்லிக்கட்டை காபாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும்.

ஜல்லிக்கட்டு மீது யாரும் கை வைக்க மாட்டார்கள்.
ஜல்லிக்கட்டு மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் அதன் விளைவை சந்திப்பார்கள்.

தமிழர்கள் ஜல்லிக்கட்டை விட்டு கொடுக்க மாட்டார்கள். விட்டுக்கொடுக்க மாட்டோம்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!