October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய இட ஒதுக்கீட்டை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சீர் மரபின பழங்குடிகள் சமூக நீதி இயக்கம் சார்பில் கருத்தரங்கம்.

தமிழ்நாடு சீர் மரபின பழங்குடிகள் சமூக நீதி இயக்கம் சார்பாக டிஎன்டி கருத்தரங்கம் மதுரை செந்தமிழ் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பழங்குடியின மக்களின் பண்பாட்டு தளத்திலும், அரசியல் தளத்திலும், மக்களின் அடையாளத்தையும், உரிமைகளையும், சமூக நீதியையும் மீட்டுருவாக்கம் செய்து பொது சமூகத்திற்கு விழிப்புணர்வு உருவாக்கும் விதமான கருத்துகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர், செய்தியாளர் சந்திப்பின்போது சமூக நீதி இயக்கத்தின் செயலாளர் அய்யநாதன் கூறியதாவது:- சீர் மரபு பழங்குடியின மக்களுக்கு சமூக கல்வி நிலையில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய தமிழ்நாடு அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்க வேண்டும்.

டி என் டி மக்களுக்கு மத்திய மாநில அரசியல் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

டிஎன்டி மக்களின் கலாச்சாரம் பண்பாடுகளை பாதுகாக்க தனி அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சரவை தீர்மானத்தின் படி டிஎன்டி மக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு டிஎன்டி பிரிவை எல்லா படிவங்களிலும் கண்டிப்பாக அச்சிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 368 சாதிகளின் பட்டியலில் விடுபட்டுள்ள நாடோடி சாதிகளை உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒபிசி., பட்டியலில் காணாமல் போன பல தமிழக டிஎன்டி சாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் சிறப்புப்பள்ளி விடுதிகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஓ பி சி பட்டியலில் பிழையாக உள்ள வேட்டுவ கவுண்டர் பெயரை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க