முகப்புஇன்றைய செய்திகள்இந்தியாவிமான நிலையத்திற்குள் வந்த சாமி ஊர்வலம் | 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட விமானங்கள் |...

விமான நிலையத்திற்குள் வந்த சாமி ஊர்வலம் | 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட விமானங்கள் | Trivandrum Airport

கேரளாவில் பத்மநாப சாமி கோயிலில் சாமி சிலை ஊர்வலத்திற்காக சர்வதேச விமான நிலையம் ஐந்து மணி நேரம் மூடப்பட்டது. கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் சுவாமி சிலைகள் ஆராட்டு விழாவுக்காக நேற்று மாலை 4 மணி அளவில் புறப்பட்டு சென்றன. இந்த ஊர்வலத்தில் திரளான கேரளா மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வழியே சென்றது. பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மரபானது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக விமான நிலையம் ஐந்து மணி நேரம் வரை மூடப்பட்டது.

இந்த ஊர்வலத்திற்கு ஏற்ப சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் என பத்து விமான வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இது போன்று நடைபெறும். விமான நிலையம் ஓடும் பாதை வழியே செல்லும் ஊர்வலம் இதன்படி மாலை 4 மணி அளவில் இருந்து இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு இருந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!