October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது அனைத்து கட்சி கவுன்சிலர் கலந்து கொண்டனர்

மதுரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உள்ள பெரியார் அரங்கில் நடைபெற்றது துவக்கத்தில் பேசிய மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், துணை மேயர் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தகூட்டத்தில் பேசிய மேயர்:
ஒற்றுமையே வெற்றி தரும், இந்த மாமன்ற கூட்டத்தை சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும் மாமன்ற உறுப்பினர்கள் பொறுமையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சியின் தலைவர்களுக்கு பேச வாய்ப்பளித்து பின் மண்டல தலைவர்களை பேச அனுமதிக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது அடுத்த கூட்டத்தில் பின்பற்றப்படும் என மேயர் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா பேசும்பொழுது மதுரைக்கு வைகையிருந்து 115 எம்.எல்.டி , வைகை படுகையில் 48, காவிரி கூட்டுக் குடிநீரில் 30 எம்.எல்.டி. என 192 எம் எல் டி தண்ணீர் பெறப்படுவதாக நான் கேட்ட கேள்விக்கு மாநகராட்சியின் அதிகாரிகள் பதில் அழைத்துள்ளனர். அப்படி என்றால் மதுரை மாநகராட்சி முழுமைக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் கொடுக்கலாம். ஆனால் அப்படியாக நிலைமை இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் இருந்து 10 எம் எல் டி மட்டுமே நமக்கு பெறப்படும் நிலையில் 30 எம் எல் டி என அதிகாரிகள் தவறான தகவல்களை அளித்ததாக கூறினார். இதற்கு பதில் அளித்த ஆணையர் இது குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்து அதற்கான பதில் அளிக்கப்படும் என்றார். இதில் திமுக மாமன்ற உறுப்பினர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பாரதிய ஜனதா மாமன்ற உறுப்பினர் காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலைக் கட்சிகள் போன்ற மாமனார் உறுப்பினர் இதில் கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க