முகப்புஇன்றைய செய்திகள்அரசியல்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூல் வினியோகம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூல் வினியோகம்

பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஆதி தமிழ் குடிகளையும் குறிப்பாக பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் வெறுப்பை பரப்புவதுமான மனுஸ்மிருதி நூலை அம்பலப்படுத்தும் விதமாக ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு இலவசமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதன் அடிப்படையில்
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் நிசார் அகமது தலைமையில் மனுஸ்மிருதி நூல் பொதுமக்களுக்கு வீடு வீடாக இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

இதில் பம்மல் நகரச் செயலாளர் தன்ராஜ் ,மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, நகர துணை செயலாளர் அன்சாரி, குமார்,அறிவுமதி, செல்வம், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!