முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்தமிழகத்தில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழக ஆளுநர் முட்டுகட்டையாக உள்ளார்

தமிழகத்தில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழக ஆளுநர் முட்டுகட்டையாக உள்ளார்

தமிழகத்தில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழக ஆளுநர் முட்டுகட்டையாக உள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் குற்றச்சாட்டு

தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபம் ஒன்றில் செங்கல்பட்டு வடக்கு, காஞ்சிபுரம், தென்சென்னை கிழக்கு ஆகிய மாவட்டங்களின் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களின் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேயமக்கள் கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த தமிழகத்தை நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய சட்டபோராட்டம் நடத்திய தமிழக அரசை பாராட்டுகின்றோம். அதேபோல் தமிழகத்தில் முஸ்லிம் சிறை கைதிகள் உள்ளிட்ட ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழகத்தில் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் முட்டுகட்டையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், செயலாளர் இப்ராஹிம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!