அதிமுக பொதுக்குழு நாளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வானகரத்தில் அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்துள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகர் பகுதி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
அந்தப்போஸ்டரில் தலையேற்க வாருங்கள், எங்களின் பொதுச்செயலாளரே என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.