October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள பிரமாண்ட புத்தக திருவிழா – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தக திருவிழா மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;

2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் வருகிற செப் 3 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் நடைபெற உள்ளது.

பிரத்தியோகமான மற்றும் புதுமையான புத்தகங்களை கண்காட்சியில் இடம்பெரும் பொருட்டு 200க்கும் மேற்பட்ட புத்தக கடைகள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

மேலும் புத்தக கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்பெரும் வகையில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவின் மூலம் கிடைக்கப்படும் வருவாய் கொண்டு கிராமப்புற பின்தங்கிய நகர்ப்புற பள்ளி நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

‘நம்ம ஊர் சூப்பர் ‘ என்ற தலைப்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக பகுதியில் கடந்த ஆக 20 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது இடங்களை சுகாதாரமாக பேணிக்காப்பது, உள்ளிட்ட தூய்மைப்பணிகள் மக்கள் புரட்சியாக உருவெடுக்கும் பொருட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க