முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பஸ் ஸ்டாண்டில் தாலி காட்டிய மாணவன் - மாணவன், மாணவி மீதான நடவடிக்கை - நீதிமன்றம்...

பஸ் ஸ்டாண்டில் தாலி காட்டிய மாணவன் – மாணவன், மாணவி மீதான நடவடிக்கை – நீதிமன்றம் அதிருப்தி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேருந்து நிலையத்தில் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு கட்டிய விவரத்தில் மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவிக்கு சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிறு கட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கடந்த செப்டம்பர் 2 தேதி நடந்த இந்த சம்பவம் ஆனது வீடியோ பதிவுகள் 12 நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வெளியாகி பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் மாணவியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அரசு காப்பகத்தில் சேர்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தனது மகளை எதற்காக அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணை வந்த போது மாணவியை சட்ட விரோதமாக வைத்திருப்பதாக சொல்லி அவரை உடனடியாக விடிவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள் இதை தொடர்ந்து பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டுவிட்டதாக மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் கூட முழுமையாக விசாரணை நடத்தாமல் அவசர நிலையில் மாணவியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தது தவறானது என்று குழந்தைகள் நல குழுவிற்கு தனது அதிருப்தியை நீதிபதிகள் பதிவு செய்தார்கள். அதுமட்டுமின்றி முறையாக விசாரணை செய்யாமல் மாணவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த காவல்துறையின் செயலுக்கும் அதிருப்தியை தெரிவித்தார்கள். இந்த மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் நடவடிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிதம்பரம் நகர போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!