October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் சகோதரருக்கு அரசு வேலை கோரியும், வேளாண்மை புது மின் இணப்பு வேண்டியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்ற நிலையில் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். இவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் புதுப்பட்டி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் தந்தை தர்மராஜ், தாய் ஆண்டாள், சகோதரர் ராமர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், தங்ளாச்சேரி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றிற்கு மின்சார வாரியத்தில் 500ரூபாய் செலுத்தி சுயநிதி திட்டத்தின் கீழ் வேளாண்மைக்கு புது மின் இணைப்பு வழங்கும் படியும், லெட்சுமணனின் சகோதரரான ராமருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர்.

மனுவினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, ராமருக்கு அவர் சான்றிதழ்களின் அடிப்படையில் உரிய அரசு வேலை வாங்கித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து ராணுவ வீரர் லெட்சுமணனின் குடும்பத்தினர் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க