spot_img
Homeமாவட்டங்கள்ராமநாதபுரம்கிணற்றில் விழுந்த சிறுவன்.. 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

கிணற்றில் விழுந்த சிறுவன்.. 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

கிணற்றில் விழுந்த சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நாகராஜ் இவரின் மகன் சுகனேஷ் (வயது 13). சுகனேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க கண்மாய் அருகில் உள்ள கிணற்கு சென்று உள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

தொடர் மழையால் கிணற்றைச் சுற்றியுள்ள சிமெண்ட் தரை தீடிர் என்று இடிந்து விழுந்து பெரும் பள்ளம் உருவாகி உள்ளது. அந்த பள்ளத்தில், சிறுவன் சுகனேஷ் தடுமாறி விழுந்து உள்ளான் மேலும் சேற்றில் சிக்கிக் கொண்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இந்த தகவலை அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் சிறுவன் சுகனேஷை மீட்கப் போராடினர். 9 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சுகனேஷை சடலமாக அதிகாலை இரண்டரை மணி அளவில் மீட்க முடிந்தது. பின்னர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக சிறுவனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்