டெல்லியின் ஜாப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் 40 வயதான கணவர் தனது மனைவியும், 2 மகள்களையும் சுட்டுக்கொன்று விட்டு தம்மையும் சுட்டுக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் ஒரு கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நான்கு பேர் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.