முகப்புபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரசிகர்கள் பொதுமக்கள் பிரார்த்தனையால் பழைய தெம்போடு உணர்வோடு வந்திருக்கிறேன் - டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க பேட்டி

ரசிகர்கள் பொதுமக்கள் பிரார்த்தனையால் பழைய தெம்போடு உணர்வோடு வந்திருக்கிறேன் – டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க பேட்டி

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர் ரசிகர்கள் பொதுமக்கள் பிரார்த்தனையால் பழைய தெம்போடு உணர்வோடு வந்திருக்கிறேன் டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க பேட்டி

நடிகரும்,இயக்கனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 14 -ம் தேதி அமெரிக்கா சென்றார்.ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 4 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்

சென்னை வந்த டி.ராஜேந்தரை இலட்சிய திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

பின்னர் செய்தியளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர்;-

டி.ராஜேந்தர் என்று சொன்னால் தன்னம்பிக்கை என்பார்கள் ஆனால் நான் இந்த இடத்தில் நிற்பதற்கு கடவுள் நம்பிக்கை தான் காரணம்.என் மீது அன்பும் மனித நேயமும் வைத்த தமிழக மக்கள் ரசிகர்களுக்கு நன்றி.இவர்களுடைய பிரார்த்தனையின் பலன் தான் எனக்கு சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம்போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டிலேயே சிகிச்சை போதும் என்றேன் ஆனால் என் மகன் அமெரிக்காவில் சிகிச்சைக்கு வலியுறுத்தியதால் சென்றேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அமெரிக்காவுக்கு சென்றேன்.அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கத்தினர் மிகுந்த அன்பை காட்டினார்கள்.

நன்றாகிவிட்டது என்னுடைய இதயம் நான் எதிர்கொண்டு இருப்பது உதயம்.அமெரிக்கா செல்ல உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி.

சிம்புக்கு திருமணம் எப்போது ?

இருமனம் ஒன்று பட்டால் திருமணம் கடவுள் எழுதியது தான் நடக்கும்.கால சக்கரம் சூழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள் மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் எங்கள் இல்லத்திற்கு நல்ல குணமுடைய திருமகள்,மருமகள் வருவாள் கடவுள் மீது நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்தார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!