பல்லாவரம் கன்டோன்மென்ட் கழக அலுவலகத்தில் நடைப்பெற்ற ஓய்வு பெற்று மறைந்த சுகாதார மேற்பார்வையாளரின் நினைவேந்தல் நிகழ்வில் தொழிலாளர்கள் பங்கேற்பு

சென்னை பல்லாவரம் துணை கண்டோன்மென்ட் கழக அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மறைந்த சுகாதார மேற்பார்வையாளர் நாராயணசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பஞ்சநாதன் அவர்களின் தலைமையில் பல்லாவரம் கன்டோன்மென்ட் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் கன்டோன்மென்ட் முன்னாள் சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபாலன் கலந்துகொண்டு நாராயண சாமி அவர்களின் திருஉருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இதில் கண்டோன்மெண்ட் முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தி பின்னர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை ஓய்வுபெற்ற கன்டோன்மென்ட் போர்டு தொழிலாளர்கள் ஒருங்கிணைத்தனர்.இதில் முன்னாள் ஊழியர்கள் பூபாலன், மனோகர்,பாரதி,எமிலியா,தனசேகர், பிலிப்ஸ்,குப்புசாமி, கலசன்,ரவி மற்றும் கன்டோன்மென்ட் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.