காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு திருநீர்மலை காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 51-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநீர்மலை பேரூர் தலைவர் கல்யாணராமன் தலைமையில் திருநீர்மலை அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டதலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் கண்ணன் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.பரமசிவம் சரவணன் டேனியல் டி.ஆர்.பாண்டியன் அனகை கே.எஸ்.பாபு ஏ.ஜெகதீசன் பி.செல்வகுமார் கணபதி தாம்பரம் யுவராஜ் விஜயகுமார் ராஜீவ் நகர காங்கிரஸ் தலைவர்கள் அப்துல் காதர் மார்த்தாண்டம் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.