October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் – அதனால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது; ஜிகே வாசன் பேச்சு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு “பெருந்தலைவர் பிறந்த நாள் விழா” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றார். தொடர்ந்து பொதுகூட்டத்தில் ஜிகே வாசனுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்ட்டது.

பின்னர் பொதுகூட்டத்தில் ஜிகே வாசன் பேசும்போது;

தமாகா கட்சி வரலாற்றில் ஆண்ட கட்சியும் இல்லை, வீழ்ந்த கட்சியும் இல்லை., ஆனால் கட்சி தொண்டர்களால் மரியாதைக்குறிய கட்சியாக திகழ்கிறது. இன்றளவும் மூன்று தலைமுறையாக வலுபெற்று கூட்டுக்குடும்பமாக செயல்பட்டு வருகிறது.

அரசியல் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் மதுரை,. தமிழகத்தில் நகரமைப்புக்கு முன்மாதிரியாக திகழும் மீனாட்சி அம்மன் கோவில், அதனை சுற்றியுள்ள தெருக்கள் தான் என்று காமராஜர் புகழ்ந்துள்ளார்.

நேர்மை, எளிமை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் காமராஜர், மாடல் என்றால் ரோல் மாடல் காமராஜர் தான் காமராஜருக்கு நிகர் காமராஜர் தான், கல்வி தொழில், விவசாய உள்ளிட்ட பல துறைகளில் புரட்சி செய்தவர்.

1960 மின்மிகை மாநிலமாக காமராஜர் ஆட்சியில் தான். அவர் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 5000 புதிய பள்ளிக்கூடங்களை கட்டி கல்வியில் புரட்சி, 4500 தொழில் வளர்ச்சி 2 ஆவது மாநிலம் உயர்த்தினார்.

தமாக மத்தியில் பிஜேபியுடன் கூட்டணியில் இருந்து வருகிறது, மத்தியில் ஆளும் பாஜக நல் அரசாக செயல்பட்டு, இந்தியாவை வல்லரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக கொரோனா பரவலை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டு அதில் வெற்றி கண்ட அரசு மத்திய அரசு தான். மத்திய அரசின் திட்டங்கள் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தின் ஆட்சி நிர்வாகம் கவலைகிடமாக செயல்படுவதை தமாக உற்று நோக்கியவாறுதான் உள்ளது.

ஓர் ஆண்டு ஆட்சி என விளம்பரங்கள் மூலம் முகமூடியை போட்டுக்கொண்டு பகட்டான ஆட்சியாகவும், சட்ட ஒழுங்கு சீர்கெட்ட அரசாகவும் உள்ளது.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

டாஸ்மார்க் நிறுவனத்தில் 5 ஆண்டுகளின் மொத்த விற்பனையில் கசிவுவாக 2 லட்சம் கோடி இடைத்தரகர்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும்.

காமராஜர் அரசு படிக்க கற்று கொடுக்க, தற்போதைய அரசு குடிக்க கற்று கொடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் கைகளில் மது பாட்டில்கள், கஞ்சா இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

குறிப்பாக மதுவும், கஞ்சவும் ஜோடி போடங்குகொண்டு இளைஞர்களையும் தமிழக மக்களின் குடும்பத்தையும் அழித்து வருகிறது.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும், இதுகுறித்த விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனால் சிறுவர்கள், பெண்கள் என பலரும் தற்கொலையில் ஈடுபடும் நிலை ஏற்படுவதால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.

செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்று தொடர்ந்து அரசிற்கு ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கும் வரை தெரியப்படுத்துவோம்.

குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் எங்கே? என்ற அறிவிப்பு, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் காழ்புணர்சியால் நிறுத்தி வருகிறது திமுக அரசு.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தாலும் மாநில அரசு குறைப்பதாக இல்லை, சிறுகுறு வேளாண் கடன் தள்ளுபடி , மீனவர்களுக்கு வீடு கட்டிதரப்படும் போன்ற தேர்தல் அறிக்கை நிறைவேற்றாத அரசாக உள்ளது.

திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, மக்களின் தேவைகளை புரிந்து செயல்பட்டால் வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் நம்ம குரல் மக்களுக்காக ஒலிக்கும் என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க