முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்தமிழக மக்களை குழப்பம் வகையில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார் - வைகோ

தமிழக மக்களை குழப்பம் வகையில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார் – வைகோ

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருடைய சிலைக்கு தேவர் அவர்களின் குருபூஜை ஒட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் அவருடன் தெற்குத் தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் உட்பட திரளான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ அவர்கள் கூறுகையில் 46 வருடங்களாக தொடர்ந்து நான் வருகை தந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் கொரோனா தொற்று காரணமாகவும் மூன்று வருடம் சிறைச்சாலையில் இருந்ததால் நான் வரவில்லை  சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு என்னளவிற்கு எந்த ஒரு அரசியல் தலைவர்களும் வந்தது கிடையாது

தமிழ்நாட்டை மக்களை குழப்புவதற்காகவே ஒரு கவர்னர் வந்திருக்கிறார் அவர் அபாண்டமாக பேசி வருகிறார். அவதூறாக பேசுகிறார் பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே நாளில் அமைந்தது தேவரின் சிறப்பு

தமிழக ஆளுநர் தேவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துப் போக வேண்டும் என்று வைத்தியநாதன் முயற்சி செய்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

தேவர் திருமகனார் துண்டு பிரசுரம் அவர்களை விரட்டியெடுத்தது ஒடுக்கப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வைத்தியநாத ஐயர் அழைத்துச் செல்வதற்கு பிரதான காரணம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் தான்

ஜாதி மத வேறுபாட்டிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை இந்த இடத்தில் நினைவு கூற விரும்புகிறேன் தேவர் புகழ் வாழ்க அவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம் வாழ்க தேவர் என்று தெரிவித்துவிட்டு பசும்பொன் நோக்கி புறப்பட்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!