October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தினமும் செய்து வருகிறார் – அமைச்சர் மூர்த்தி

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தினமும் செய்து வருகிறார் ; அரசு தரும் இந்த நாள் வாய்ப்பினை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மூர்த்தி பேச்சு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி 760 பயனாளிகளுக்கு 1 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,

மேலும் பழங்குடி இன மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 58 பேருக்கு வன அனுமதி வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் பேசியஅமைச்சர் மூர்த்தி அரசை தேடி மக்கள் செல்லும் நிலை தற்போது மாறி மக்களை தேடி அரசே பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்திட்டங்களை செய்து வருவதாகவும்,

இதே போல பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக வன அனுமதியை தற்போது வழங்கி இருப்பது பெருமைக்குரிய நிகழ்வு என்றும், தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் விதமாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க