முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை... பொதுமக்கள் மகிழ்ச்சி:

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி:

மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை பகுதியில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் இருந்து வருகிறது. இரண்டு நாட்களாக வெயில் குறைந்து, குளிர்ந்த காற்றும், அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கமான வெயில் சுட்டெரித்தது. வெட்கை அதிகரித்த நிலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மாலை நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென்று மேகங்கள் திரண்டுவந்த மதுரையில் பல்வேறு பகுதியில் மாட்டுத்தணி பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம் கோரிப்பாளையம் ஆரப்பாளையம் பேருந்து ஆகிய பகுதியில் உட்பட பல இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக வெட்கை குறைந்து, இதமான சூழல் ஏற்பட்டது. மதுரையில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!