முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரை மாநகராட்சியின் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா பேட்டி

மதுரை மாநகராட்சியின் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா பேட்டி

மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களால் மக்களுக்கான பணிகளையும். சேவைகளையும் செய்ய முடியவில்லை எதற்கு இந்த பதவி ராஜினாமா செய்வதா அல்லது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதா என மதுரை மாநகராட்சியின் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா பேட்டி

மதுரை மாநகராட்சியில் நடைபெறும் நகர சபை கூட்டத்தை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்
புறக்கணித்து உள்ளனர்

மாநகராட்சி நகர சபை கூட்டத்திற்கு குழு அமைக்கப்பட்டதாகவும் அதில் திமுகவினரை சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு.

எங்களிடம் 10 பேர் கொண்ட குழு அமைக்க போவதாகவும் அதற்கு உரிய நபர்களை தேர்ந்தெடுத்து தர என கோரிக்கை வைத்தனர் நாங்கள் அதன் அடிப்படையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை முழுவதுமாக அறிந்தவர்களின் பட்டியலை கொடுத்தோம் ஆனால் அதில் இருக்கக்கூடிய யாவரையும் அவர்கள் தேர்ந்தெடுக்காமல் ஐந்து பேர் எங்களையும் ஐந்து பேர் திமுகவில் சேர்த்து மக்களுக்கு எந்த வித பணியும் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர் இந்த குழுவினை நாங்கள் முழுமையாக புறக்கணிக்கிறோம்

மாமன்ற உறுப்பினர் பங்கேற்காமலையே அதிமுகவினரின் வார்டுகளையும் நகர சபை கூட்டம் நடத்தி வருகின்றனர்

இதே போல எங்கள் வார்டுகளிலும் கூட்டம் நடத்தினால் நாங்கள் ஜனநாயக முறைப்படி நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை எங்கள் வார்டுகளில் அந்த கூட்டத்தை நடத்த நாங்கள் எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம் எனவும்

மதுரை மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை.
எதற்காக பணியில் இருக்க வெண்டும் ஆகவே ஆணையரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவெடுத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தெரிவித்துள்ளார்.பின்பு மக்களை ஒன்றாக திரட்டி நிச்சயமாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!