Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

வைரலாகும் சில்க் ஸ்மிதாவின் தற்கொலை கடிதம்..!!

சினிமாவில் கவர்ச்சி நடிகையாக மட்டும் அல்லாமல் தனக்கு என்று ஓர் தனி இடத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. திரைப்படத் துறையை உலுகிய சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் இன்று வரை தெரியவில்லை.

80s,90s காலகட்டத்தில் திரை உலகில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களால் அதிகம் தேடப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா என கூறப்படுகிறது. மேலும் நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு சினிமா துறையில் ஏற்பட்ட மன சோர்வு காரணமாக 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதாவின் அப்போதைய வயது 35 ஆகும்.

தற்போது, இறப்பதற்கு முன் சில்க் ஸ்மிதா சோகமான நிலையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சில்க் ஸ்மிதா கடிதத்தில் எழுதி இருப்பது

நடிகையாக வருவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். யாரும் என்னை நேசிக்கவில்லை. நடிகர் பாபு மட்டும் என்னிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டார், எல்லோரும் என்னுடைய வேலையைப் பயன்படுத்திக் கொள்வார்கள், வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளது. அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை. எல்லோருடைய செயல்களும் என்னை தொந்தரவு செய்தது. ஒருவேளை மரணம் என்னைக் கவர்ந்திருக்கலாம்

என எழுதி உள்ளார்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க