முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையேயான பிரிவு அண்ணன் - தம்பி பிரிவு போல தான் - செல்லூர்...

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போல தான் – செல்லூர் ராஜூ

அதிமுகவிலிருந்து ஒரு தொண்டன் கூட இருந்து பிரிந்து செல்ல கூடாது எனவும், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போல தான் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக எம்.எல்.ஏ & அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,
“தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல திமுகவினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். ஒன்றரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒட்டு வாங்க மட்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தற்போது, ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கூட்டணி நிரந்தரமானது அல்ல.
தேர்தல் நேரத்தில் பாஜக உடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சி முடிவெடுக்கும்.

பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறி கொண்டிருக்கிறது.
அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறி செல்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும்.

இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாது ஒன்று. ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியை கொண்டு வந்துள்ளோம். ஒரு தொண்டன் கூட கட்சியில் இருந்து செல்ல கூடாது என்பதே எங்கள் விருப்பம்.
காளிமுத்து, ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான். எனவே, எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம்.

ஜி.எஸ்.டி வேண்டாம் என சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்” என தெரிவித்தார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!