100% வாக்குப்பதிவிற்கு துணை புரியும் வகையில், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தேனி மாவட்ட செயலராக இருக்கிறேன். “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது” என்பதே தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரமாக உள்ளது. 100% சதவிகித வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அன்று தேர்தல் பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலமாக செலுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது. பல நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கின்றன. அதனால்தான் தபால் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இதனால் 100% வாக்குப்பதிவு நடைமுறையில் தொய்வு ஏற்படுகிறது. ஆகவே 100% வாக்குப்பதிவிற்கு துணை புரியும் வகையில், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, ” இந்த விவாகரம் தொடர்பாக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.