முகப்புஇன்றைய செய்திகள்அரசியல்மதுரை விமான நிலையத்தில் பாரதப் பிரதமர் எடப்பாடியாரிடம் மட்டுமே பேசினார்  - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் பாரதப் பிரதமர் எடப்பாடியாரிடம் மட்டுமே பேசினார்  – ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் பாரதப் பிரதமர் எடப்பாடியாரிடம் மட்டுமே பேசினார் 

பாரதப் பிரதமர் எடப்பாடியாரிடம் பேசியது ஒன்னரை கோடி அதிமுக  தொண்டர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரையில் பாரதி யுகேந்திரா சார்பில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு பெட்ஷீட் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நெல்லை பாலு தலைமை வழங்கினார் பெட்ஷீட் மற்றும் உணவினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார் அவருடன்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா உடன் இருந்தார்

ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது

மழையால் உயிர் பலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது சமீபத்தில் மாங்காடு நகராட்சியில் மழை வடிகால் பணிகள் நடைபெற்றிருந்தபோது லெட்சுமிபதி என்பவர் அது சிக்கி பலியாகியுள்ளார். தொடர்ந்து 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைகை பாசனத்திற்கு தண்ணீர் குறைந்துவிடுவதாவ் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர். வேளாண்மை  பட்ஜெட்டில் வைகை அணையை தூர்வாரபடும் என்று அறிவித்தார்கள்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பாசனப்பரப்பும் குறைந்து கொண்டே போய் உள்ளது.

தற்போது கேரளா தமிழகம் எல்லையை ரீசர்வே செய்ய கேரளா அரசு முடிவு எடுத்துள்ளது நீலகிரி முதல் குமரி வரை இந்த ரீ சர்வே செய்யப்படும் என்று கேரளா அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு இந்த தகவல் தெரியுமா என்று தெரியவில்லை கேரளாவின் சர்வேயால் நமது எல்லைகள் பறிபோகும் என்று பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்  வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. 

 திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் இந்த சட்டத்திற்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன.  இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது அனைத்து கட்சி கூட்டத்தை அழைத்து திமுக அரசு பேசவில்லை வாதங்கள் தோல்வி அடைந்தவுடன் தற்போது அனைத்து கட்சி கூட்டம் என்று நாடகத்தை நடத்துகிறார்கள் அந்த நாடகத்தை நாங்கள் விரும்பவில்லை.

பிரதமர் உடனான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சந்திப்பு குறித்த கேள்விக்கு,

மதுரையில் பாரதப் பிரதமர் வந்த பொழுது ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.குறிப்பாக கடந்த பத்து தினங்கள் முன்பு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 51 வது பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் தீர்க்கமான ஒரு பதிலை சொன்னார்.

2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழுவில் எடுத்த முடிவை யாரும் கட்டுப்படுத்த முடியாது, பொதுக்குழு முடிவை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம், பொதுக்குழு அடிப்படையில் செயல்படுவோம் என்று தெளிவாக கூறிவிட்டார். இதுதான் எங்கள் நிலைப்பாடு இந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தெளிவாக சொல்லிவிட்டார் இதுதான் உண்மை. ஆனால் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன

“நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அதிமுக சார்பில் எடப்பாடியார்  சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், நான், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் சென்றோம். அதில் கவர்னர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 42 பேர்கள் இருந்தனர். 

எடப்பாடியாரை பார்த்ததும் பிரதமரின் முகத்திலே மலர்ச்சி தெரிந்தது.

எடப்பாடியிடம் How are you என நலம் விசாரித்தார் பிரதமர். I’m fine என பதிளிலளித்தார் எடப்பாடியார்.

எடப்பாடியாரை  தவிர வேறிடமும் யாரிடமும் பிரதமர் பேசவில்லை. 

விமான நிலையத்தில் பிரதமர் பேசிய ஒருவர் எடப்பாடியாரிடம்  மட்டும் தான்.வேறு யாரிடமும் பேசவில்லை அதே போல் தான் வழியனுப்பு விழாவின் போதும் பிரதமர் எடப்பாடியாரிடம் இதேபோல்  சகோதர பாசத்துடன் நடந்து கொண்டார் வேறு யாரிடமும் பேசவில்லை என்பதை நான் அருகில் இருந்து பார்த்தேன்  பாஜகவை சேர்ந்த அண்ணாமலையை அழைத்து ஏதோ பேசினார் வேறு யாரிடமும் பேசவில்லை 

பாரத பிரதமர் எடப்பாடியாரிடம் பேசியது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம். ஒன்னரை கோடி தொண்டர்கள் கிடைத்த அங்கீகாரம் .எடப்பாடியார் பன்னீர்செல்வத்துடன் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்ளவே இல்லை இதுதான் உண்மை 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் இதற்காக பெரும் முயற்சி எடுத்தது புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர்தான்.

 பிப்ரவரி 14ம் தேதி 2014 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அமைச்சரை கூட்டத்தில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிவித்தார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் தாய்மை நிலையில் உள்ள நளினி மட்டும் விடுதலை செய்து மற்றவர்கள் தண்டனை நிறைவேற்றலாம் என்று அமைச்சரை கூட்டத்தில் நிறைவேற்றினார் இந்த 6 பேர் விடுதலைக்கு யார் எல்லோருக்கும் நன்றாக தெரியும். என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!