முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மூன்றடி வாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி புள்ளைங்கோ.

மூன்றடி வாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி புள்ளைங்கோ.

மதுரை திருமங்கலத்தில் மூன்றடி வாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி புள்ளைங்கோ.

மதுரை திருமங்கலம் பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபர் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். அவரது பிறந்த நாள் கடந்த இரு தினங்களுக்கு முன் திருமங்கலம் நகர் பகுதியில் கொண்டாடப்பட்டது. அப்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் அஜய் என்ற வாலிபருக்கு கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.

தொடர்ந்து., இருபதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பிறந்தநாள் கேக் வழங்கி அஜய் என்ற வாலிபருக்கு 3 1/2 அடி உயர வாளை பரிசாக கொடுத்து அதை வைத்து கேக் வெட்டினர். அந்தக் கொண்டாட்டத்தின் நிகழ்வை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் தற்போது அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வீடியோக்களை வைரல் ஆக்கவும்., அதிக Likes கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே., மதுரையில் கடந்த சில தினங்களாக தனியார் பெண்கள் கல்லூரியில் தேவர் ஜெயந்தியின் போது இளைஞர்கள் ரகலையில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி கல்லூரி முன்பு மாணவியின் தந்தையை இளைஞர்கள் தாக்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில்.,

தற்போது திருமங்கலத்தில் பட்டா கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டி அந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருவது தற்போது மதுரையில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறையினரின் நடவடிக்கை என்ன என்று பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!