October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

செ.26 ல் இலவசங்கள் தொடர புதிய விநியோகத் திட்டத்தை தனித்துறையாக்கி செயல்படுத்த கோரி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

செ.26 ல் இலவசங்கள் தொடர புதிய விநியோகத் திட்டத்தை தனித்துறையாக்கி செயல்படுத்த கோரி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் செம்மையானத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார் மாநில செயல் தலைவர் லெனின் பொதுச்செயலாளர் ஜீவானந்தம் பொருளாளர் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன பின்ன மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளரிடம் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பண்டிகை முன்பணம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், கடந்த ஆட்சி காலங்களில் தொழிற்சங்கத்தை அழைத்து பேசாமல் தன்னிச்சையாக அறிவிக்கும் போக்கு இருந்தது.

தற்போது புதிய ஆட்சி கடந்த ஆண்டு கொரோனா காரணத்தைக் காட்டி போனஸை தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்தது. இந்த ஆண்டு எதிர்வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தொழிற்சாலை ஒப்புதலோடு 20% போனஸ் வழங்க வேண்டும் கூடுதலாக 5 சதவீதம் கருணைத்தொகை வழங்க வேண்டும். சட்ட விதிகள் அடிப்படையில் போன சட்டத்திற்கு கீழ் வராத கூட்டுறவுச்சட்ட விதி 97 அடிப்படையில் மூன்று மாத அடிப்படைச் சம்பளம் அல்லது ரூபாய் 1200 என்கிற ஒரு விதியை மாற்றி அமைக்க வேண்டும் என கடந்த 33 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. போனஸ் தொகைக்கு நிகராக அந்த விதியில் குறைந்தபட்சம் 8,400 அதிகபட்சமாக 16,800 என திருத்தி அமைத்து அனைவருக்கும் பண்டிகை காலத்திற்குள் போனஸ் தொகையை வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் கூட்டுறவு ஊழியர்களுக்கு மறுக்கப்படக்கூடிய சூழல் இருக்கிறது மாநில கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஒருவித ஓய்வூதியமும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஒருவித ஓய்வூதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தவர்களுக்கு கேரளம் போன்று அனைத்து கூட்டுறவு நிறுவனம் ஊழியர்களுக்கும் ஒரு நிதியத்தை உருவாக்கி கருணை ஓய்வூதியம் என்பது அனைவரும் பெறக்கூடிய அளவிற்கு உயர்த்தி வழங்குவதற்கான தமிழக அரசு அதற்கான குழுவை அமைத்து அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். புதிய அரசு அமைந்தவுடன் விவசாய கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என்றெல்லாம் அறிவித்தது.

புதிய கடன் வழங்குவதற்கு ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய தொடக்க வேளாண் கூட்டுசங்களை ஒரு சிறு பகுதி மட்டும் சொந்த நிதிகளை செயல்படக்கூடிய சங்கங்கள் சொந்த நிதி செயல்படக்கூடிய நிதியில் செயல்படக்கூடிய சங்கங்களுக்கு நிதி ஆதாரம் இல்லாமல் புதிய கடன் வழங்க இயலாமல் இருக்கிறது. உடனே தமிழக அரசு தள்ளுபடி செய்த தொகைகளை உடனே விடுவித்து அதனை அந்த தொடக்க வேளாண் கூட்டு சாங்காளுக்கு சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும்.

அப்போதுதான் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க முடியும். நியாய விலைக் கடைகளில் இன்றைக்கு இலவசங்கள் மானியங்களை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. உண்மையிலேயே மானியங்கள் இலவசங்கள் என்பதால் ஏழைகளுக்கு மிகப்பெரிய பயனை அடைந்து கொண்டிருக்கிறது.

அது அவர்களை ஏற்றி விடுவதற்கான ஒரு ஏணியாக தான் நாங்கள் பார்க்கிறோம். எனவே மாநிலங்கள் தொடர வேண்டும் இலவச தொடர வேண்டும் . பொது விநியோக திட்டத்தை தனித்துறையாக்கி செயல்படுத்த வேண்டும்
நிறைவேற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 26 ஆம் தேதி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து இருக்கின்றோம், என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க