Thursday, May 26, 2022

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

திருமணஞ்சேரியில் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருமணஞ்சேரியில் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மகளிர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் குத்தாலம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல் நிலையத்தில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த மோதல் சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் குத்தாலம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அப்பாவி இளைஞர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் பொய்யாக வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும் , இரு சமூகத்திற்கு இடையே மோதலை உருவாக்கும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், திருக்கோயிலில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகளை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காத கோயில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க டிஎஸ்பி தலைமையில் பல்வேறு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -
- Advertisment -

டிரெண்டிங்

Ad Blocker Detected!

தளத்தில் விளம்பரங்களை அனுமதிக்கவும் நீங்கள் விளம்பர தடுப்பை பயன்படுத்துவதாக தெரிகிறது. தளத்தை நடத்துவதற்கான நிதி ஆதாரத்துக்கு விளம்பரங்களை சார்ந்துள்ளோம்

Refresh