முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து...

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் மதுரை மாநகர பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம், நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் “மின் கட்டண உயர்வால் தொழில் வளமிக்க தமிழகம் தொழிற்ச்சாலைகளை இழந்து வேலை வாய்ப்புகளை இழந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வருவது அதிகமாகும், மின் கட்டணம் உயர்ந்தால் பொருட்கள் விலை உயரும், தமிழக மூதல்வர் இவ்விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மின் வாரிய கடனை அடைக்க வேறு வகையில் சிந்திக்க வேண்டும், இதை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும், மின் வாரியத்தில் ஆபத்து கால நீதி என ஒன்று உள்ளது, அதை பயன்படுத்த வேண்டும், ஆள தெரிந்தவர்களுக்கு அது தெரியும், ஆளத்தெரியவில்லையென்றால் அதை கண்டுபிடிக்க முடியாது” என கூறினார்

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!