Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

மெரினாவில், குதிரை ஓட்டுபவர்களுக்கு சீருடைகள் வழங்கிய போலீசார்.

சென்னை, மெரினாவில் சுற்றுலா பயணிகளுக்கு சவாரி செய்யும், குதிரை ஓட்டுபவர்களுக்கு, போலீசார் சீருடைகள் வழங்கினர்.

சென்னை, மெரினாவில், வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், குதிரை சவாரியும் செய்கின்றனர். இந்த வேலையை, தனி நபர்கள் செய்து வருவதால் அவர்களுக்கு சீருடை வழங்க, போலீசார் முடிவு செய்தனர்.

போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், நேற்று , மயிலாப்பூர் உதவி கமிஷனர், மெரினா இன்ஸ்பெக்டர் ஆகியோர், குதிரை ஓட்டுபவர்களுக்கு, சீருடைகள் வழங்கினர்.

அவர்களுக்கு, மஞ்சள் நிறத்தில் டீ சர்ட், தொப்பி, சிமண்ட் நிறத்தில், பேண்ட் ஆகியவை கொடுக்கப்பட்டது.

மேலும், அவர்களை தனியாக அடையாளம் காண்பதற்கு, அடையாள அட்டை எண்ணும் வழங்கப்பட்டது.

மேலும், பொதுமக்களிடம் நடந்துக்கொள்ளும் முறை குறித்தும், குதிரை ஓட்டுபவர்களுக்கு, போலீசார் அறிவுரை வழங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க