முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பெட்ரோல் குண்டு வீசுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்- தென் மண்டல ஐஜி...

பெட்ரோல் குண்டு வீசுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்- தென் மண்டல ஐஜி பேட்டி

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் திண்டுக்கல் மாவட்டம் குடைப் பாறைபட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு மர்ம கும்மல் பெட்ரோல் குண்டு வீசியதில் ஒரு கார், 5 டூவீலர் எரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருவதாக கூறினார்.

மேலும் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள் என்றார்.

தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!