முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்திருநீர்மலை பெரிய ஏரியை சீரமைக்கக்கோரி தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் நீதி மையம் சார்பில் கோரிக்கை...

திருநீர்மலை பெரிய ஏரியை சீரமைக்கக்கோரி தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் நீதி மையம் சார்பில் கோரிக்கை மனு

பராமரிப்பின்றி கிடக்கும் பல்லாவரம் அடுத்துள்ள திருநீர்மலை பெரிய ஏரியை சீரமைக்கக்கோரி தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் நீதி மையம் சார்பில் கோரிக்கை மனு

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் பெரிய ஏரி சுற்றியுள்ள குரோம்பேட்டை திருநீர்மலை நாகல்கேணி மற்றும் பல்வேறு அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி பயன்பட்டு வந்தது ஆனால் தற்போது ஏரிக்கு அருகில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து இரசாயன கழிவுகள், சட்ட விராதமாக மருத்துவ கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதால் இதில் உள்ள மீன்கள் செத்து மடிகின்றன

அதுமட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது இதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பெரிய ஏரியை தூர்வாரி சுத்தப்படுத்தி ஏரியை சுற்றி பொதுமக்கள் நடைபாதை மேற்கொள்ள பாதை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் செயலாளர் எம்.பி உதயச்சந்திரன் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!