முகப்புஇன்றைய செய்திகள்இந்தியாஉயிரைக் காப்பாற்ற போராடிய மக்கள்… குஜராத் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு...

உயிரைக் காப்பாற்ற போராடிய மக்கள்… குஜராத் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு…

குஜராத் மாநிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான மோர்பி பகுதியில் உள்ள கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 120 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிருக்கு போராடியபடி மக்கள் சிக்கிக் கொள்ளும் காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

கேபிள் பாலம் குஜராத்தின் மோர்பி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாலம் நூறு ஆண்டுகள் பழமையான பலம் என கூறப்படுகிறது. இப்பாலும் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மறு சீரமைப்பிற்காக தனியார் நிறுவனத்திடம் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 7 மாதங்கள் மறு சீரமைப்பு பணி நடைபெற்றது, பிறகு கடந்த 26 ஆம் தேதி பாலம் திறந்து வைக்கப்பட்டது.

சாத் பூஜையை முன்னிட்டு நேற்று சுமார் 500 பேர் அந்த பாலத்தின் மீது ஏறி உள்ளனர். இதனால் மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. தற்போது ஆற்றுக்குள் விழுந்த மக்களை காப்பாற்ற போராடும் நெஞ்சை உலுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஏறி சென்ற இந்த பாலத்தில் சுமார் இதுவரை 130 க்கும் அதிகமானோர் பலியானதாகவும் மற்றும் 120க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அதிக பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இரவு முழுவதும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால் ஒன்றிய அரசு ஆணை பெறாமலும் உறுதிப்படுத்தாமல் அந்த பாலம் திறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாலம் திறந்த நான்கே நாட்களில் 500 பேர் ஒரே சமயத்தில் பயணித்ததால் இடிந்து விழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது..

Tag: Morbi Cable Bridge | Gujarat Morbi Cable Bridge Collapse | No Fitness Certificate For Gujarat Morbi Cable Bridge Collapse After Just 4 Days And 32 People Died | 32 People Died In Gujarat Morbi Cable Bridge Collapse | Gujarat CM Bhupendra Patel Announces Rs 4 Lakh Compensation To Kin Of Morbi Cable Bridge Collapse | Over 100 Feared Trapped After Cable Bridge Collapses In Gujarat |Gujarat Morbi Cable Bridge Collapsed And 100 Feared Trapped | Cable Bridge Collapsed In Gujarat | Morbi Cable Bridge Collapsed In Gujarat State | Gujarat Morbi Cable Bridge Collapsed And 100 People Were Trapped In The River | Gujarat Morbi Cable Bridge Collapsed Accident | குஜராத்தில் அறுந்து விழுந்த கேபிள் பாலம் | குஜராத் மாநிலம் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்தது | குஜராத் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்து 100 பேர் ஆற்றில் சிக்கிய சோகம் | குஜராத் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து | குஜராத்தில் அறுந்து விழுந்த கேபிள் பால விபத்தில் 32 பேர் பலி | குஜராத்தில் அறுந்து விழுந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்து 32 பேர் இறந்த சோகம் | குஜராத் கேபிள் பாலம் விபத்து | குஜராத் கேபிள் பாலம் விபத்துக்கான காரணம் என்ன? | குஜராத் கேபிள் பாலம் திறந்த 4 நாளில் 32 பேர் உயிரிழந்த சோகம் | பிட்னஸ் சான்று இன்றி திறக்கப்பட்ட குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 32 பேர் பலி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!