முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால் தான்...

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால் தான் மக்கள் பணிகளை சரியாக கவனிக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

மதுரை பரவையில் R.J.தமிழ்மணி சாரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதே? என்ற கேள்விக்கு.
தமிழக முதல்வர் தற்போதைய நிலை குறித்து கவனமாக கையாள வேண்டும். தீபாவளி வர உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தொடங்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கை களை தொடங்க வேண்டும்.

விழா காலங்களில் அரசு பேருந்துகள் , ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு அனைத்து தரப்பினருடன் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளின் தற்போதைய கட்டண உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்.

தமிழக அமைச்சர்களுக்கு தற்போது வாய்கொழுப்பு அதிகமாகி விட்டது. அமைச்சர்கள், மக்கள் வரி பணத்தில் தான் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

அமைச்சர்கள் செல்லும் கார் ஓசி, பணியாட்கள் ஓசி, வீடு ஓசி, என அனைத்தும் ஓசி, மக்கள் வரி பணத்தில் தான் அமைச்சர்களுக்கு எல்லாம் ஓசி.

ஆனால் ஒரு அமைச்சர், பெண்களை பார்த்து ஓசி பயணம் என.வாய் கொழுப்பாக பேசுகிறார்.

எனவே தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவசம் என கூறாமல், விலையில்லா மடிகணினி, சைக்கிள் என பெயரிட்டு அழைத்தார்.

எனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று உள்ளதை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் யானை பாகன் போல் செயல் பட்டார். ஆனால் தற்போது, குதிரை ஓட்டியாக பயண்படுத்து கின்றனர்.

நல்ல மனிதாபிமானம் மிக்க IAS அதிகாரிகளை, நல்ல வகையில் பயண்படுத்த வேண்டும்.

தற்போது ரேசன் அரிசி கடத்தல் அதிகமாகி உள்ளது. இந்த விசயத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன் கைகள் கட்டப்பட்டு உள்ளது.

போதை பொருள் விற்பனை கடத்தல் , அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை முதல்வர் சர்வாதிகாரி யாக மாறவில்லை?
மதுரை மாநாகராட்சி மேயரை முதலில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அமைச்சர் PTR, சொல்வதை தான் செய்ய வேண்டும் என செயல்படுகிறார். முதலில் மதுரை மேயரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட எந்த பணிகளும் முறையாக நடைபெற வில்லை. இவ்வாறு, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பேட்டி அளித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!