32 C
Cuddalore
புதன்கிழமை, செப்டம்பர் 22, 2021

ஆம்புலன்சில் ஒன்றரை வயது குழந்தை ஆக்சிஜனின்றி பரிதாப மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் பெருமளவில் நாடே திணறி வருகிறது. இந்தியாவில் அதிக படியான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று என பல சவால்களை சுகாதாரத்துறை சந்தித்து தான் வருகிறது. இந்த நிலையில் ஒன்றைரை வயது குழந்தை விசாகப்பட்டினம் அருகே உள்ள மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லலாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியுடன் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை வயது குழந்தை ஜான்விதா விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரம் பகுதியை சேர்ந்தவர். ஜான்விதாவுக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜான்விதாவை அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளித்துவருவதால் குழந்தையை அனுமதிக்க மறுத்து உள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

இந்தனை அடுத்து, குழந்தையை விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
திடீரென்று மூச்சுத்திணறல் குழந்தைக்கு ஏற்பட்டதால் ஆக்சிஜன் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லாமல் போனதால் இரண்டு மணி நேரமாக ஆம்புலன்சிலேயே இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
2,951FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles