October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

மயிலாடுதுறை அருகே கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் முழுவதும் இன்று முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மங்கநல்லூர் கடைவீதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கருப்பு சட்டை அணிந்தபடி அமைதி பேரணி சென்றனர். தொடர்ந்து கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருஉருவப்படத்திற்கு ஏராளமானோர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES
  • MORE STORIES ON
  • dmk

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க