முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி

மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் இயக்கத்தை உருவாக்கி சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இயக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார்.

மேலும், மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நவம்பர்-1 தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மாநிலம். ஆனால், தூய்மையான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் இடம்பெற வில்லை.

மது போதை போன்றவற்றுக்கு எப்படி இளைஞர்கள் அடிமையானர்களோ, அதுபோலவே தற்போது சினிமா மாயையில் அடிமையாகின்றனர்.

எல்லா மதங்களிலும் பல பிரிவுகள் உள்ளது. இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறித்தவம், முஸ்லிம், உள்ளிட்ட எல்லா மதங்களிலும் பிரிவுகள் உள்ளது. இந்து மதத்தில் மிக முக்கியமானது உருவ வழிபாடு.

இயக்குனர்களுக்கு அடிப்படை தெரியவில்லை. ராஜராஜ சோழனுக்கு இந்து என்ற முத்திரையை யார் கேட்டது.

திரைப்படங்களில், அருவாள் கலாச்சாரம் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்பதற்காக புதிய தமிழகம் கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் தற்போது வருகின்ற சில திரைப்படங்கள் வன்முறைக் காட்சிகளை காண்பிக்கின்றன. ஆனால் பெருமளவில் அவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!