முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்தாம்பரம் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் தென்னக ரயில்வேயின் தேசிய பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள்...

தாம்பரம் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் தென்னக ரயில்வேயின் தேசிய பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் ஆய்வு

மத்திய அரசின் தென்னக ரயில்வேயின் தேசிய பயணிகள் வசதி குழுவின் உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமையில் தாம்பரம் நகர பாஜ தலைவர் கணேஷ் மற்றும் பயணிகள் வசதி குழுவினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது ரயில் பயணிகளிடம் ரயில் நிலையத்தில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது ரயில்வே தண்டவாளம் அருகே பயணிகளுக்கு வழங்கும் ஏராளமான குடிநீர் பாட்டில்கள் வெயிலில் வைத்தபடி பல மணி நேரம் இருந்ததை கண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழித்து உடனடியாக தண்ணீர் பாட்டில்களை அங்கிருந்து எடுக்கக் கூறியும், இதுபோன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள குடிநீரை வெயிலில் வைப்பதால் அது பயணிகளுக்கு தீங்கை விளைவிக்கும் என எச்சரித்தனர்.

அதேபோல ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் கழிவறை பராமரிப்பு ஊழியர்களையும் பயணிகள் வசதி குழுவினர் எச்சரித்தனர்.

பின்னர் செய்தாளர்களை சந்தித்த தேசிய பயணிகள் வசதி குழுவின் உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறுகையில் :
ரயில்வே பயணிகள் உடைய ஆலோசனைக் குழு கமிட்டி உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களாக சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

ரயில்வே அமைச்சர் மூலமாக பிரதமரின் நேரடி பார்வையில் இந்த ரயில் பயணிகள் ஆலோசனை குழு இயங்குகிறது.
தொடர்ந்து வருடம் முழுவதும் ஒவ்வொரு ரயில் நிலையங்களும் சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக பயணிகள் உடைய வசதி நலன் கருதி குடிநீர் வசதி, மின்விசிறி வசதி மற்றும் நேரம் அறிவிப்பு உள்ளிட்ட பயணிகளின் அனைத்து தேவைகளும் கேட்டறிந்து அதை அறிக்கையாக தயாரித்து டெல்லியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற கூட்டத்தில் பதிவு செய்து வருகிறோம்.

தாம்பரம் ரயில் நிலையம் பொருத்தவரை ஆறு மற்றும் ஏழாவது பிளாட்பாரங்களில் எக்ஸ்கலெக்டர் அல்லது லிப்ட் வசதி செய்து தர வேண்டும், கோச் டிஸ்ப்ளே வைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பயணிகள் முன் வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

தாம்பரத்தை 3வது முனயமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்ப்பட்டுள்ளது.
விரைவில் 3வது முனயமாக அறிவிக்கப்படும். மேலும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!