மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ மருதய்யா (எ) தர்மசாஸ்தா கோவிலில் நேற்று காலை விசேஷ அபிஷேக தீபாராதனையும் பிற்பகல் 12 மணிக்கு மாவிளக்கு போடுதல் மாலை ஐந்து மணிக்கு ஸ்ரீ மருதய்யா (எ) தர்மசாஸ்தா கோவிலில் சன்னதி முன்பு தீமிதி மிதித்து தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.
இரவு ஸ்ரீ தர்மசாஸ்தா பாரிவேட்டை காட்சி அனைத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது இத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்