ஊழலில் கரை படிந்துள்ள திமுக அரசின் மதுரையின் உருவமாக அமைச்சர் மூர்த்தி உள்ளார்- மதுரையில் வேலூர் இப்ராஹிம் பேட்டி
பாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்,தொழில்துறை பிரிவு மாநில தலைவர் கோவர்த்தனன் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம் பேசும்போது,
பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் இன்று மாவட்ட செயற்குழு கூட்டம் மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை செய்யாமல் வாக்குறுதிக்கு மாற்றமாக செயல்படும் திமுக மோசமான அரசை எதிர்த்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர் மூர்த்தி கனிம வள கொள்ளை,பத்திர பதிவுத்துறையில் ஊழலில் ஈடுபட்டு வருகிறார் என பாஜக குற்றம் சாட்டுகிறது அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தி வருகிறோம்.ஊழலில் கரை படிந்துள்ள திமுக அரசின் மதுரையின் உருவமாக அமைச்சர் மூர்த்தி உள்ளார்.எனவும் திமுக வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ தொகுதிக்கு வருவதில்லை மக்கள் குறைகளை கொண்டு போனால் விரட்டி அடிக்கிறார்.
தலைக்கு 2000 ரூபாயும் சாராய பாட்டிலும் கொடுத்தால் போதும் என பேசுகிறார்.அவர் எவ்வளவு மோசமான துரோகமான செயலை செய்து வருகிறார்கள்.இவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.கடவுள் மறுப்பு கொள்கை உடைய மதுரை எம்பி வெங்கடேசன் பிரிவினைவாதத்தை பேசக் கூடியவர்.மதுரை மக்களின் வாக்குகளை பெற்று மோசமாக செயல்பட்டு வருகிறார்.தமிழகத்தில் ஊழலால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.பயங்கரவாத சக்திகள் ஊக்கம் பெற்று இருக்கிறார்கள்.பாஜகவினர் இஸ்லாமிய சமுதாய மக்கள் இருக்கும் பகுதிக்குள் போக முடியவில்லை. பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவருக்கும் இதே நிலைமை. தமிழகத்தில் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. என்று பேசினார்.மேலும் பேசிய அவர்,தமிழகத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்டால் முதல்வர் மு க ஸ்டாலின் எங்களை எதிரி கட்சியாக பார்க்கிறார்.
முதலில் கலைஞர் பின்னர் ஸ்டாலின் அடுத்து உதயநிதி ஸ்டாலின் மன்னர் ஆட்சி போல நடத்தி வருகிறார்கள்.
திமுகவை தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் இனி மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.தர்மம் வெல்லும் தாமரை வெல்லும் என்று பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.