முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்இந்தியாவின் முதல் மார்பக பெட் ஸ்கேன் சாதனத்தை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தனர்

இந்தியாவின் முதல் மார்பக பெட் ஸ்கேன் சாதனத்தை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தனர்

இந்தியாவின் முதல் மார்பக பெட் ஸ்கேன் சாதனத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் திரு. முனீஷ்வர நாத் பண்டாரி, அமைச்சர் மா. சுப்ரமணியன் துவக்கி வைத்தனர்

மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள “மூலக்கூறு இமேஜிங் உடன் கூடிய மேமோகிராஃபி” (MAMMI) என அழைக்கப்படும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மார்பக பெட் ஸ்கேன் வசதியை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் திரு. முனீஷ்வர நாத் பண்டாரி தொடங்கி வைத்தார்.

இத்தொடக்கவிழா நிகழ்வில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். S. குருசங்கர் மற்றும் திருமதி. காமினி குருசங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது:-

‘மேமோகிராபி வித் மாலிகுலர் இமேஜிங்’ (MAMMI) என்று அழைக்கப்படும் இந்த PET ஸ்கேன் பிரத்யேகமாக மார்பக புற்றுநோயைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டியானது 2 மிமீ அளவுக்கு சிறியதாக இருக்கும் போது கூட இதனால் கட்டியை கண்டறிய முடியும். இதன் மூலம் சீக்கிரம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளி விரைவில் குணமடைய முடியும்.

பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களுள் மிக பொதுவானதாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. 28 பெண்களுள் ஒருவருக்கு மார்பக புற்றுநோய்
வரும் வாய்ப்புள்ளதாக இருக்கிறது.

எனினும், மிக தாமதமாகவே இது கண்டறியப்படுவதால், நோய்பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு மேமோகிராம் அல்லது CT அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவற்றை விட, ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கான செல்கள் உருவாவதை PET ஸ்கேனால் கண்டறிய முடியும். இருப்பினும், இன்று மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் முழு உடல் PET ஸ்கேன் மட்டுமே உள்ளது. மார்பக பரிசோதனைக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள MAMMI என்ற இப்பிரத்யேக PET ஸ்கேனால் 2 மி.மீ. அளவுள்ள திசுத்திரள் அல்லது கட்டி ஒருவருக்கு உருவாவதற்கு முன்பே கண்டறிய முடியும். இதற்கு மாறாக 10 மி.மீ. அளவுக்கு, அதாவது 2 மி.மீ. அளவுள்ள புற்றுநோய் 100 மடங்கு அதிகமாக வளர்ந்த நிலையில் மட்டுமே முழு உடல் PET சாதனத்தால் புற்றுநோய் கட்டியை கண்டறிய முடியும்.

ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கட்டியை அடையாளம் காணமுடியும் என்பதால், அதை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை உடனே தொடங்கி. மார்பகத்தை அகற்றுவதற்கான சிகிச்சை அல்லது அவசியமற்ற பிற துணை சிகிச்சைகள் இதனால் தவிர்க்கப்படும்.

கீமோதெரபிக்கு எந்த அளவிற்கு நோயாளிகளுக்கு சிகிச்சைப்பலன் கிடைக்கிறது என்பதையும் MAMMI PET ஆல் தெரிவிக்க முடியும்.

MAMMI PET என்பது, ஒரு எளிய, வலியற்ற பரிசோதனை; கதிரியக்க ட்ரேசரை ஒரே முறை ஊசி மூலம் செலுத்தும்போது மார்பகத்தின் 360-டிகிரி தோற்றப் படத்தை இது உருவாக்குகிறது. இதன் மூலம் சிறிய கட்டிகளும், நோய் இருக்கும் பகுதிகளும் விடுபடாமல் இருக்கும். மார்பக அழுத்தம் ஏதும் இல்லாமலேயே இத்தோற்றப் படங்கள் எடுக்கப்படுவதால் நோயாளிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது.
30-40 நிமிடங்களுக்குள் இச்செயல்முறை நிறைவடையும் என்பதாலும் இந்த சிகிச்சை முறை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை துவங்கியதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

மேலும்
தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாம்நிலை நகரமான மதுரையில் உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பமும், தரமான சிகிச்சைகளும் கிடைக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.” என்று கூறினார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் திரு. முனீஷ்வர நாத் பண்டாரி இந்த MAMMI PET இன் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!